"கட்டுபொல்" – நாவல் விமர்சனம் - கே.எஸ்.சுதாகர்
இந்த நாவலின் ஆசிரியர் திருமதி பிரமிளா பிரதீபன், எனக்கு ஞானம் சஞ்சிகையின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர். ஞானம் சஞ்சிகை ‘புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ என அறிமுகம் செய்த முதலாவது படைப்பாளி இவர். அப்போது இவர் பிரமிளா செல்வராஜா என அறியப்பட்டிருந்தார். பதுளை மாவட்டம் - ஊவா, கட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ’அறுபதுகளிலிருந்து ஐம்பது ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத்தளத்தில் உருவாகிய ஒரேயொரு...