அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமீளா பிரதீபனின் இரண்டு கதைகள் | அ.ராமசாமி
இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்- மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமீளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக்கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத்...