அல்லிராணி - பிரமிளா பிரதீபன்
01நமுனுகுல மலைத்தொடர்ச்சியின் அகண்டவெளிப் பள்ளத்தாக்கிற்குள் இருந்த அந்தத் தோட்டத்தை அல்லிராணி மிக விரும்பினாள். உலகில் வேறெதையுமே அறியாத தனிமையில் அவளும் உரத்தொலிக்கும் அவள் வீட்டு வானொலி பாடல்களுமென குறுகியதொரு வட்டத்திற்குள் அவள் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தாள்.அல்லிராணிக்கு காதுகள் இரண்டும் அவ்வளவாகக் கேட்பதில்லை. எனினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து மொத்த லயமும் அதிரும் அளவிற்கு...