உரப்புழுக்கள் - பிரமிளா பிரதீபன்
‘வாங்க… சட்டுன்னு மிச்சமீதாரிய அள்ளி வச்சுட்டு போயிருவம்’ என்று அவசரப்படுத்தியபடி உரக்குவியலிற்கருகில் நின்று கொண்டிருந்தாள் சுரேகா. மீண்டும் அவர்கள் மண்வெட்டியால் உரத்தைக் கிளறி யூரியா பேக்குகளுக்குள் அள்ளித் திணிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு கிளறலின் போதும் குபுக்கென வந்துமோதிய மணம் அவர்களை மூச்சடக்கி முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தது.சுரேகா மண்வெட்டியால் உரத்தைக் கிளறக்கிளற கைகளால் மற்றயவர்கள்...