நீலி - பிரமிளா பிரதீபன்
By
sara
On
July 13, 2021
In
பிரமிளா பிரதீபன்
துங்ஹிந்த நீர்வீழ்ச்சி தெறித்து விழுமோசை அவ்வனத்து எல்லை வரை துல்லியமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கிளைக்குக் கிளை தாவிக் குதித்துக்கொண்டிருந்த இரண்டு குரங்குகள் அவ்வோசையின் தாளத்திற்கேற்பவே பாய்ந்தபடி சென்றன. அக்காட்டின் ஒற்றை தேவதையான நீலி அக்குரங்குகளை பின்தொடர்ந்தபடி நடந்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தனவாய் அக்குரங்குகள் திசைமாறி போய்க் கொண்டிருந்தன. காட்டிற்குள்...