ஒரு அரசமரமும் சில வெளவால்களும் - பிரமிளா பிரதீபன்
By
sara
On
April 14, 2020
In
பிரமிளா பிரதீபன்
“இன்னு கொஞ்ச நாள்ல வீட்டுக்குள்ளயும் வேர் வந்து வீடெல்லாம் வெடிக்கப்போகுது பாரு…” அம்மா பேசிக்கொண்டிருப்பது மரத்துடன்; என்பதையறியாமல் நான் பதில் பேசிக்கொண்டிருந்தேன். “அதுக்காக வேர் எங்கெல்லாம் போகுதுன்னு தேடி வெட்ட முடியுமா என்ன…?”
“பின்ன என்னடி, அரச மரமாச்சே வெட்ட கூடாதுன்னு பாதுகாத்துவச்சா முழுசா அபகரிச்சிடும் போலிருக்கே…!”
என்னதான் அடிக்கடி இப்படி திட்டினாலும் இந்த அரசமரத்தின் மீதான...